எல்லாரும் பயங்கரமா வெயிட்டிங்.. சோனி கேமரா.. 12ஜிபி ரேம்.. 80W சார்ஜிங்.. வருகிறது புது Vivo 5ஜி போன்..
விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் தற்போது கீக்பெஞ்ச் (Geekbench) தளத்தில் ஏ2426 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டது. எனவே வரும் வாரங்களில் இந்த விவோ டி3 அல்ட்ரா போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ டி3 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T3 Ultra Specifications): 6.67-இன்ச் 1.5கே 3டி கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) டிஸ்பிளே உடன் இந்த விவோ டி3 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் எஸ்ஒசி (MediaTek Dimensity 9200+ SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ போன் வெளிவரும்.
ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எம்எக்ஸ்921 (Sony IMX921) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த விவோ போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scanner) வசதியைக் கொண்டுள்ளது விவோ டி3 அல்ட்ரா போன்.
5500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ டி3 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் தனித்துவமான ஃப்ரோஸ்ட் கிரீன் (Frost Green) மற்றும் லூனா கிரே (Luna Grey) நிறங்களில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் விலைக் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
அதன்படி ரூ.30,999 பட்ஜெட்டில் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் செப்டம்பர் முதல் பாதியில் நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆன்லைனில் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








