Home
Mobile

வாரே வா.. வேற எந்த VIVO போனும் வாங்கிடாதீங்க.. பக்காவான PRICE-ல் 12GB ரேம், OIS கேமரா, 80W சார்ஜிங்!

Vivo T3 Ultra: இந்திய சந்தையில்.. பேக்-டூ-பேக் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து.. ஒப்போ, ரியல்மி, மோட்டோ, நோக்கியா போன்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று விவோ நிறுவனம் முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதிதான் இந்நிறுவனம் அதன் டி3 சீரிஸின் கீழ் விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. தற்போது இந்நிறுவனம் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு தயாராக உள்ளது. இது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

விவோ டி3 அல்ட்ரா எப்போது அறிமுகமாகும்? இது வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இதன் வெளியீடு செப்டம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

வாரே வா.. வேற எந்த VIVO போனும் வாங்கிடாதீங்க!

விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஏற்கனவே வாங்க கிடைக்கும் டி3 சீரீஸின் கீழ் இணையும் என்பதில் சந்தேகமே வேண்டாம். முன்னரே குறிப்பிட்டபடி, விவோ டி3 ப்ரோ (Vivo T3 Pro) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தான் இந்திய சந்தையால் அறிமுகப்படுத்தப்பட்டது. பெயரை வைத்து பார்க்கும் போது - புதிய அல்ட்ரா வேரியண்ட் ஆனது ப்ரோ வேரியண்ட்டை விட அப்கிரேடட் அம்சங்களை கொண்டிருக்கும் என்பது போல் தெரிகிறது.

விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1.5கே 3டி கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை (1.5K 3D curved AMOLED display) கொண்டிருக்கலாம். இந்த டிஸ்பிளே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வரலாம்.

ப்ராஸசரை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 9200 Plus SoC) மூலம் இயக்கப்படலாம். அல்ட்ரா-ஸ்லிம் டிசைனுடன் வரும் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேடிங்கையும் (IP68 Rating) பெறலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் சோனி IMX921 ப்ரைமரி கேமராவை பேக் செய்யலாம். இதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா (Ultra-wide Angle Camera) இடம்பெறலாம். முன்பக்க கேமராவை பொறுத்தவரை, இது 16 மெகாபிக்சல் சென்சார் உடன் வரலாம்.

பேட்டரியை பொறுத்தவரை, விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை பேக் செய்யலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்பீக்கர்ஸ் (Dual Speakers) போன்றவைகளை கொண்டிருக்கலாம்.

விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? 91மொபைல்ஸ் வழியாக கிடைத்த லேட்டஸ்ட் அறிக்கையின்படி, விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.30,999 க்கும், அதே நேரத்தில் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.32,999 மற்றும் ரூ. 34,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

இருப்பினும் விற்பனையின் போது சலுகைகள் உட்பட, விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ரோஸ்ட் கிரீன் மற்றும் லூனா கிரே என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3 Ultra India Launch Soon See Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X