Home
Mobile

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

விவோ நிறுவனம் நாளை (செப்டம்பர் 12) விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்பு இந்த போனின் விலை மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.33,000 விலையில் விவோ டி3 அல்ட்ரா 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த விவோ சாதனம் விற்பனைக்கு வரும். மேலும் ஃப்ரோஸ்ட் கிரீன் (Frost Green) மற்றும் லூனா கிரே (Luna Grey) நிறங்களில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும்.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. என்ன விலை?

விவோ டி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Vivo T3 Ultra 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் எஸ்ஒசி(MediaTek Dimensity 9200+ SoC)சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ போன் வெளிவரும்.

6.67-இன்ச் 1.5கே 3டி கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த விவோ டி3 அல்ட்ரா 5ஜி போன் அறிமுகமாகும். 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

12ஜிபி ரேம் (12ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த விவோ டி3 அல்ட்ரா 5ஜி போனில் OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எம்எக்ஸ்921 (Sony IMX921) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த விவோ போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scanner) வசதியைக் கொண்டுள்ளது விவோ ஸ்மார்ட்போன்.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. என்ன விலை?

5500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ டி3 அல்ட்ரா 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த புதிய விவோ டி3 அல்ட்ரா 5ஜி போன் பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo T3 Ultra 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X