செப்டம்பர் 12 வரை எந்த போனும் வாங்காதீங்க.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. வருகிறது Vivo 5ஜி போன்..
விவோ நிறுவனத்தின் புதிய விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G) ஸ்மார்ட்போனை இந்திய அறிமுக தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இந்த புதிய விவோ போன் ஆனது வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் விவோ டி3 அல்ட்ரா 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
விவோ டி3 அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Vivo T3 Ultra 5G Specifications): இந்த விவோ டி3 அல்ட்ரா 5ஜி போன் 6.67-இன்ச் 1.5கே 3டி கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் அறிமுகமாகும். 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

அதேபோல் தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் எஸ்ஒசி(MediaTek Dimensity 9200+ SoC)சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ போன் வெளிவரும்.
அதேசமயம் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 12ஜிபி ரேம் (12ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ டி3 அல்ட்ரா 5ஜி போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எம்எக்ஸ்921 (Sony IMX921) பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த விவோ போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scanner) வசதியைக் கொண்டுள்ளது விவோ டி3 அல்ட்ரா 5ஜி மாடல்.

இந்த புதிய விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ டி3 அல்ட்ரா 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு தனித்துவமான ஃப்ரோஸ்ட் கிரீன் (Frost Green) மற்றும் லூனா கிரே (Luna Grey) நிறங்களில் இந்த புதிய விவோ போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.30,000 பட்ஜெட்டில் இந்த விவோ டி3 அல்ட்ரா 5ஜி போன் விற்பனைக்கு என்று கூறப்படுகிறது.
photo credit: thetechoutlook.com


Click it and Unblock the Notifications