Home
Mobile

ஒரே நேரத்தில் 2 VIVO போன்கள் மீது ரூ.2000 விலை குறைப்பு.. ஒன்னு Pro மாடல்.. இன்னொன்னு Ultra மாடல்!

2025 புத்தாண்டை தொடர்ந்து வரும் பொங்கல் பண்டிகை காலத்திலும் கூட, விவோ (Vivo) நிறுவனம் எந்தவொரு புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவில்லை. மாறாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய வலைத்தளங்களில் நடக்கும் 2025 குடியரசு சிறப்பு விற்பனைகளில், சில விவோ ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன.

இதற்கிடையில் "தன் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்கிற நோக்கத்தின் கீழ், விவோ நிறுவனமானது தனது 'டி' சீரீஸின் கீழ் அறிமுகமான 2 லேட்டஸ்ட் மாடல்கள் மீது விலை குறைப்பை அறிவித்துள்ளது. அதென்ன மாடல்கள்? எவ்வளவு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

ஒரே நேரத்தில் 2 VIVO போன்கள் மீது ரூ.2000 விலை குறைப்பு!

விவோ நிறுவனம் அதன் விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) மற்றும் விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களின் மீது தான் விலை குறைப்பை அறிவித்துள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ரூ.2,000 விலை குறைப்பை பெற்றுள்ளன.

விவோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (ஜனவரி 13) முதல், விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும் வாங்க கிடைக்கும்.

இதேபோல விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும் வாங்க கிடைக்கும். மேற்கண்ட புதிய விலைகளானது விவோ இந்தியா இ-ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் அனைத்து பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களிலும் பிரதிபலிக்கும்.

விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 9200+ சிப்செட், OIS உடனான 50எம்பி சோனி IMX921 ப்ரைமரி சென்சார், 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் ரியர் கேமரா, 50எம்பி செல்பீ கேமரா, 5500mAh பேட்டரி, 80W பிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம், ஐபி68 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது

விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77-இன்ச் 3டி AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட், 50எம்பி சோனி IMX882 OIS ப்ரைமரி லென்ஸ் மற்றும் 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, 80W பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் திறன்களுடன் 5500mAh பேட்டரி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், ஐபி64 ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது.

பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் 2025 இந்திய குடியரசு தின சிறப்பு விற்பனையான பிளிப்கார்ட் மோனுமென்டல் சேலில், கவனிக்கப்பட வேண்டிய 2 விவோ ஸ்மார்ட்போன்கள் ஆபர்: விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) - இது ரூ.14,499 க்கு பதிலாக ரூ.9,249 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ வி30 ப்ரோ (Vivo V30 Pro) - இது ரூ.46,999 க்கு பதிலாக ரூ.34,999 க்கு வாங்க கிடைக்க்கிறது

2025 இல் புதிதாக அறிமுகமாகும் விவோ ஸ்மார்ட்போன்கள்: சமீபத்தில், விவோ எக்ஸ்200 (Vivo X200), விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஆகிய 2 மாடல்கள் சீனா மற்றும் உலகளவிலும், விவோ எக்ஸ்200 மினி (Vivo X200 Mini) மாடல் சீனாவிலும் அறிமுகமானது. இதற்கு அடுத்தபடியாக விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3 Pro Vivo T3 Ultra gets Rs 2000 Price Cut in India Check Out New Prices Major Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X