ஆஹா வந்துட்டான்யா Vivo.. சோனி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 27) புதிய விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.அதேபோல் 80W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள், விற்பனை விவரங்களை இந்த பதிவில் சற்று வரிவாகப் பார்க்கலாம்.
விவோ டி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications): 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே(3D Curved AMOLED Display) உடன் விவோ டி3 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 1,080 x 2,392 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 7 Gen 3 SoC) சிப்செட் கொண்டுள்ளது விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 7120 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14(Android 14) இயங்குதள வசதியுடன் இந்த புதிய விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 882 பிரைமரி கேமரா (50MP Sony IMX 882 primary camera) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ டி3 ப்ரோ 5ஜி
ஸமார்ட்போன். மேலும் 16எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் சினிமாடிக் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. சாண்ட்ஸ்டோன் ஆரஞ்ச் (Sandstone Orange) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) நிறங்களில் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த விவோ போன்.

விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் இதன் எடை 184 கிராம் ஆகும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி3 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.26,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. வரும் செப்டம்பர் 3-ம் தேதி மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் (flipkart) மற்றும் விவோ ஸ்டோர் ஆகிய தளங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








