Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. SONY சென்சார்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் (Flipkart Diwali Sale) வெச்சி செஞ்சிட்டாங்கனு சொல்லும் அளவுக்கு 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மெயின் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி மற்றும் கேமிங் பிரியர்களுக்கான லிக்விட் கூலிங் சிஸ்டம் கொண்ட விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த விவோ 5ஜி மாடலின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

விவோ பிரியர்கள் தீபாவளிக்கு ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்களில் தட்டித்தூக்கும் இந்த விவோ டி3 ப்ரோ மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். ஏனென்றால், ரூ.24,999 பட்ஜெட்டில் வெளியான இந்த போன் இப்போது வெறும் ரூ.21,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. வேகன் லெதர் பேனல் வருவதால், விற்பனை பட்டையை கிளப்புகிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க! பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. SONY சென்சார!

விவோ டி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications): இந்த விவோவில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்822 (Sony IMX822) சென்சார் மற்றும் ஹைபிரிட் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Hybrid Image Stabilization) கிடைக்கிறது.

ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 2X போர்ட்ராய்டு மோட் (2x Portrait Mode) வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது. கேமராவை போலவே டிஸ்பிளேவும் பிரீமியம் பீச்சர்களை கொடுக்கிறது.

இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) வருகிறது. மேலும், ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுபோக எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) வருகிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க! பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. SONY சென்சார!

கலர் அக்கியூரசிக்காக 1.07 பில்லியன் கலர் டெப்த் வருகிறது. பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் உள்ளது. கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு மட்டுமல்லாமல், பேட்டரிக்காக லிக்விட் கூலிங் சிஸ்டம் (Liquid Cooling System) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) கிடைக்கிறது. இந்த விவோ டி3 ப்ரோ மாடலில் 5500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) பேக் செய்துள்ளது. மேலும், IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

விவோ டி3 ப்ரோ 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Vivo T3 Pro 5G Flipkart Sale): இந்த விவோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இப்போது, எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.21,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தாலும் ரூ.3000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3 Pro 5G With 5500mAh Battery Gets 16 Percent Discount Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X