பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.21,999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
எச்டிஆர்10பிளஸ் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 7.99 மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடியில் லெதர் பேனல் போன்ற பக்கா பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ள விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) போனுக்கு நம்ப முடியாத பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ரூ.3000 விலை குறைப்பில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.
இந்த விவோ போனானது, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு கேமரா, டிஸ்பிளே மற்றும் பேட்டரி பீச்சர்களை பிரீமியமாக கொடுத்துள்ளது. கூடுதலாக வேகன் லெதர் பேக் வருவதால், அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான லிக்விட் கூலிங் சிஸ்டம் (Liquid Cooling System) மற்றும் வெட் டச் (Wet Touch) போன்ற டெக்னாலஜிகளை பேக் செய்துள்ளது.

விவோ டி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications): இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) கிடைக்கிறது.
வெட் டச் டெக்னாலஜி (Wet Touch Technology) கொண்ட 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. மேலும், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனை 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜிகளுடன் ஹைபிரிட் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Hybrid Image Stabilization) கேமரா சிஸ்டம் வருகிறது.

சோனி ஐஎம்எக்ஸ்822 (Sony IMX822) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. நைட் மற்றும் போர்ட்ராய்டு போட்டோகிராபிக்காக 2X ரியர் போர்ட்ராய்டு மோட் (2x Rear Portrait Mode), நைட் மோட் (Night Mode) கொண்டுள்ளது. இந்த விவோ டி ப்ரோ 3 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது.
3டி கர்வ்ட் டிஸ்பிளேவை பேக் செய்திருந்தாலும் 5500mAh பேட்டரி வருகிறது. கூடவே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. வெட் டச் மட்டுமல்லாமல், IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) பேக் செய்துள்ளது.
இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.21,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ரூ.9,250 மதிப்பில் எச்ஸ்சேஞ்ச் போனஸ் பெற்று கொள்ளலாம். இது பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகும்.


Click it and Unblock the Notifications








