ஆர்டர் மிரளுது.. வெறும் ரூ.21000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், ஃபுல்எச்டி அமோலெட் பேனல், சோனி ஐஎம்எக்ஸ் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) போன் பட்ஜெட்டில் வந்துள்ளது. இந்த விவோ போனின் முழு பீச்சர்கள் எப்படி? இப்போது கிடைக்கும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரூ.30,000 பட்ஜெட்டுக்கு மேல் செலவு செய்தால் மட்டுமே 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன்களை வாங்க முடியும் என்ற காலம் மாறிவிட்டது. இப்போது, வெறும் ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன. ஆனால், இந்த பட்ஜெட் போன்களில் டிஸ்பிளே பீச்சர்களை தவிர மற்ற பீச்சர்கள் சுமாராகவே பேக் செய்யப்படும். ஆகவே, 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன்களை வாங்கும்போது அனைத்து பீச்சர்களை பார்க்க வேண்டும்.

இப்போது, விற்பனைக்கு வந்துள்ள விவோ டி3 ப்ரோ 5ஜி போனில் அந்த தேவை இருக்காது. மிட்-ரேஞ்ச் போன்களில் எதிர்பார்க்கப்படும் பெரும்பாலான பீச்சர்களை பட்ஜெட்டில் கவர் செய்துள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், மற்ற பீச்சர்களிலும் கஸ்டமர்களை தட்டிதூக்கி இருக்கிறது. முதலில் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களுக்கு செல்வோம்.
விவோ டி ப்ரோ 3 5ஜி அம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications): இந்த விவோவில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. இதுபோக 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருவதால், அவுட்டோர் அவுட்புட் பக்காவாக இருக்கும்.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. விவோவின் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ டி3 5ஜி போன் விற்பனைக்கு வந்துள்ளது. அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.
பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் வருகிறது. இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனில் சோனி ஐஎம்எக்ஸ்822 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவுடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆரா லைட் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி வருகிறது. 16 எம்பி செல்பீ வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. 5500mAh பேட்டரி வருகிறது. IP64 ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. இந்த விவோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999 ஆக இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆகவே, ரூ.21,999 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்யலாம். எச்டிஎப்சி, எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications