மார்கெட் மிரளும்.. ஆக.27 இருக்கு.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. EYE புரொடெக்சன்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 4500 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ், சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் வேகன் லெதர் பேனலுடன் விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) போன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அறிமுகமாகிறது. பட்ஜெட்டில் வெளியாக இருப்பதால், இப்போதே எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. இந்த போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்? விலை எப்படி இருக்கும்?
இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் வரிசையாக பீச்சர்கள் வெளியாக இருக்கின்றன. இப்போது, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 4500 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ், சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்ற பீச்சர்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன.

மேலும், வேகன் லெதர் பினிஷ் (Vegan Leather Finish) பேக் பேனல் கொண்ட சாண்ட்ஸ்டோன் ஆரஞ்ச் (Sandstone Orange) கலரில் இந்த போன் வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனின் விலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி போன்ற ஆரம்ப மாடலின் விலை ரூ.23,999 ஆக இருக்க வாய்ப்புள்ளது. மேலும், அறிமுக சலுகையுடன் ரூ.22,000 பட்ஜெட்டில் இந்த போனை விவோ பிரியர்கள் எதிர்பார்க்கலாம். இந்த விலையை போலவே இந்த போனின் மற்ற பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆகவே, இந்த விவோ டி3 ப்ரோ போனில் என்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.
விவோ டி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications): இந்த விவோவில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமல்லாமல், 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் பன்டச்ஓஎஸ் (Funtouch OS) வருவது கிட்டத்தட்ட உறுதிதான்.
ஏனென்றால், இப்போது வரும் பட்ஜெட் போன்களிலேயே ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வந்துவடுகிறது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 7 Gen 3 SoC) சிப்செட் மற்றும் கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 7120 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு எதிர்பார்க்கலாம். இந்த செக்மெண்ட்டில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.
இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனின் டிசைனை பார்க்கையில், டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) மற்றும் ஆரா எல்இடி (Auro LED) ஃபிளாஷ் வருகிறது. ஆகவே, போர்ட்ராய்ட் மற்றும் நைட்போட்டோகிராபி பீச்சர்களுடன் வெளியாகலாம். சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) வர வாய்ப்புள்ளது.
இதுபோக ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance) போன்ற பீச்சர்களும் வர வாய்ப்புள்ளது. மெயின் கேமராவுக்கு அடுத்தபடியாக 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வர வாய்ப்புள்ளது. ஆகவே, பட்ஜெட்டில் பக்கா கேமராவை இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி போனில் எதிர்பார்க்கலாம்.
மேலும், 5500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வர வாய்ப்புள்ளது. பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டும், 7.49 எம்எம் தடிமன் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. டைப்-சி போர்ட், டூயல் நானோ சிம், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற வழக்கமான பீச்சர்களை இந்த போனில் எதிர்பார்க்கலாம். இந்த செக்மெண்ட்டில் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








