Home
Mobile

தலைவன் Vivo நாளைக்கு வரான்.. Sony கேமரா.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் நாளை (ஆகஸ்ட் 27) புதிய விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் லுக், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே,சோனி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்பு இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ டி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications): 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) உடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தலைவன் Vivo நாளைக்கு வரான்.. Sony கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 7 Gen 3 SoC) சிப்செட் கொண்டுள்ளது இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் அட்ரினோ 7120 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த புதிய விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 882 பிரைமரி கேமரா (50MP Sony IMX 882 primary camera) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ டி3 ப்ரோ 5ஜி ஸமார்ட்போன். மேலும் 16எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

குறிப்பாகஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance) போன்ற அம்சங்களும் இந்த விவோ போனில் வரும் என்று கூறப்படுகிறது. பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது. சாண்ட்ஸ்டோன் ஆரஞ்ச் (Sandstone Orange) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) நிறங்களில் இந்த போன் வெளிவரும்.

தலைவன் Vivo நாளைக்கு வரான்.. Sony கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த போன். அதேபோல் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு டைப்-சி போர்ட், டூயல் நானோ சிம், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்தியாவில் விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மர்ட்போன் ஆனது ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் (Flipkart), விவோ இந்தியா இ-ஸ்டோர் (Vivo India e-Store) போன்ற தளங்களில் இந்த புதிய விவோ போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3 Pro 5G will be launched in India tomorrow: check price, sale details, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X