கன்ஃபார்ம்-ஆ ஆர்டர் தெறிக்கும்.. பவர்ஃபுல் ஆன அம்சங்கள்.. பக்கா விலையில் புதிய Vivo 5G போன்.. என்ன மாடல்?
இந்தியாவில் இந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் மிகவும் முக்கியமான ஸ்மார்ட்போனாக விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) பார்க்கப்படுகிறது. இன்னும் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் அனைத்துமே (ஒவ்வொன்றாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது; அது அனைத்துமே) ஆக.26 ஆம் தேதிக்குள் வெளிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால்.. இது பெரும்பாலும் இம்மாத இறுதிக்குள்ளேயே அறிமுகமாகி விடும். விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இம்மாதம் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன? இதோ விவரங்கள்:
விவோ டி3 ப்ரோவில் இதுவரை என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் விவோ.காம் (Vivo.com) வலைத்தளங்களில் உள்ள மைக்ரோசைட்டுகளின் வழியாக விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பல முக்கிய அம்சங்கள் (டிசைன், டிஸ்பிளே, கேமரா மற்றும் ப்ராசஸர்) ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டு விட்டன.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் செல்பீ கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட்அவுட் உடனான 3டி கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். நினைவூட்டும் வண்ணம் விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1,300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வந்தது.
கேமராக்களை பொறுத்தவரை, இதுவரையிலாக பெயர் குறிப்பிடப்படாத சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் தலைமையிலான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை மட்டுமே விவோ நிறுவனம் டீஸ் செய்துள்ளது. விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கும் பட்சத்தில், இது 50எம்பி சோனி IMX882 சென்சார் உடன் வரலாம். பழைய விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 64எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் சிப்செட் என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 SoC) ஆக இருக்கலாம். இது AnTuTu பெஞ்ச்மார்க்கில் 824,000 க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்ற சிப்செட் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள டைமன்சிட்டி 7200 சிப்செட்டின் ஸ்கோரை விட அதிகமாகும்.
டிசைனை பொறுத்தவரை, விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆரஞ்சுமற்றும் பளபளப்பான கோல்டன் ரெயிலிங் உடனான புதிய வேகன் லெதர் ஸ்கின்னை பெற்றுள்ளது. அளவீட்டில் இது 7.4 மிமீ தடிமன் கொண்டதாக இருக்கும் என்றும் வதந்திகள் பரவுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இந்த பிரிவில் உள்ள ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
பேட்டரியை பொறுத்தவரை, எந்த தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, விவோவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 5,500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த சரியான விவரங்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று வெளிப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இதற்கு முந்தைய மாடலான விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமானது.
விவோ டி3 ப்ரோ என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் இது ரூ.31,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து இம்மாதம் (ஆகஸ்ட் 2024) ஐக்யூ இஸட்9 எஸ் சீரிஸ் (iQOO Z9s series), மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) மற்றும் எச்எம்டி பார்பி போன் (HMD Barbie Phone) போன்ற மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. கூடவே போக்கோ பேட் 5ஜி (Poco Pad 5G) டேப்லெட்டும் அறிமுகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








