இப்படி இருக்கனும் ஆஃபர்.. ரூ.5,000 விலை குறைப்பு.. 5500mAh பேட்டரி.. 50MP கேமரா.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் விவோ டி4 ப்ரோ 5ஜி (Vivo T4 Pro 5G) வெளியாகி இருப்பதால், அதற்கு முந்தைய மாடலான விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 5500mAh பேட்டரி, 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களின் பட்டையை கிளப்புகிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் கொண்ட இந்த விவோ மாடலின் முழு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மார்கெட்டில் வெளியானபோது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆகவும் இருந்தது. இப்போது, ரூ.2,000 நேரடி விலை குறைப்பு போக கிடைக்கிறது. ஆகவே, பிளிப்கார்ட் தளத்தில் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது.

அதேபோல 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. இந்த விலை குறைப்பு போக ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,999 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை வாங்கலாம். அதேபோல ரூ.21,999 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம்.
விவோ டி3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications): 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (4nm Octa Core Snapdragon 7 Gen 3) சிப்செட் வருகிறது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் பேஸ்டு ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்822 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் பொக்கெ கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்ட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. சூப்பர் நைட் மோட் (Super Night Mode), போர்ட்ராய்டு மோட் போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்கள் வருகின்றன. விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை பார்க்கையில், 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ + பொக்கெ கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 6,77 இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. பக்கா பேக்கப் கொடுக்கும்படி 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 எஸ்ஓசி (Octa Core Snapdragon 7 Gen 4 SoC) கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. கேமராவில் 3X பெரிஸ்கோப் ஜூமிங் கிடைக்கிறது. அதேபோல சோனி சென்சார் (Sony Sensor) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி வருகிறது. இந்த விவோ டி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையும் ரூ.24,999ஆக இருக்கிறது. ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications








