மார்க்கெட்டே அதிர போகுது.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என பிளிப்கார்ட் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில் விவோ டி3 லைட் 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த விவோ போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ டி3 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T3 Lite 5G specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (MediaTek Dimensity 7200) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்
விவோ டி3 லைட் 5ஜி போன் ஆனது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விவோ டி3 லைட் 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும்.
ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் இந்த புத்தம் புதிய விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இந்த விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இந்த விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் ரூ.12,000 பட்ஜெட்டில் இந்த விவோ போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications