Home
Mobile

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. வெறும் ரூ.9,999 போதும்.. 50MP கேமரா.. புது Vivo 5ஜி போன் அறிமுகம்..

விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது பட்ஜெட் விலை ரெட்மி போன்களுக்கு போட்டியாக தான் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. அதுவும் 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது விவோ டி3 லைட் 5ஜி. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

விவோ டி3 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T3 Lite 5G specifications): 6.56- எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி3 லைட் 5ஜி போன் வெளிவந்துள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 840 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (840 nits peak brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்..  புது Vivo 5ஜி போன் அறிமுகம்..

தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ டி3 லைட் 5ஜி போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ டி3 லைட் 5ஜி போன். பின்பு இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த விவோ டி3 லைட் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. வைப்ரண்ட் கிரீன் (Vibrant Green) மற்றும் மெஜெஸ்டிக் பிளாக் (Majestic Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்..  புது Vivo 5ஜி போன் அறிமுகம்..

5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

குறிப்பாக 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி3 லைட் 5ஜி போனை ரூ.10,499 விலையில் வாங்கலாம். பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.11,499 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.500 தள்ளுபடி உள்ளது. எனவே இந்த போனை ரூ.9,999 விலையில் வாங்கிவிட முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X