மார்க்கெட்டே திணறப்போகுது.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் தற்போது BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
அதேபோல் விவோ டி3 லைட் 5ஜி போனின் மாடல் எண் V2356 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு புளூடூத் SIG தளத்தில் கூட இந்த விவோ போன் காணப்பட்டுள்ளது.மேலும் ஆன்லைனில் வெளியான இந்த விவோ டி3 லைட் 5ஜி போனின் முழு விவரங்களையும் இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ டி3 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T3 Lite 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (MediaTek Dimensity 7200) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.
எனவே கேமிங் பயனர்கள் இந்த விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ டி3 லைட் 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ டி3 லைட் 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் இந்த புத்தம் புதிய விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த விவோ டி3 லைட் 5ஜி போன் இந்தியாவில் ரூ.12,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








