ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 44W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் ஜூன் 27-ம் தேதி (June 27) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன் டூயல் ரியர் கேமராக்கள், டைமன்சிட்டி சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த விவோ டி3 லைட் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
விவோ டி3 லைட் 5ஜி அம்சங்கள் (Vivo T3 Lite 5G specifications): ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 ( MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் வெளிவரும்.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். இந்த புதிய போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ டி3 லைட் 5ஜி போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ டி3 லைட் 5ஜி போன். பின்பு இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது விவோ டி3 லைட் 5ஜி போன். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த விவோ ஸ்மார்ட்போன் ரூ.12,000-க்கு கீழ் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் ( Flipkart) தளத்தில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications