Home
Mobile

50MP கேமரா, 5000mAh பேட்டரி, IP64 ரேட்டிங்.. டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கும் Vivo 5G போன்!

அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஆனது தத்தம் இகாமர்ஸ் வலைத்தளங்களில் 2025 சம்மர் சேல்களை தொடங்க தயாராக உள்ளன. குறிப்பாக அமேசான் கிரேட் சம்மர் சேல் ஆனது மே 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதன்கீழ் பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் க்ரோமா வலைத்தளம் ஆனதும் சைலன்ட் ஆக சில ஸ்மார்ட்போன்கள் மீது நல்ல டிஸ்கவுண்ட்களை அறிவித்துள்ளது. அவைகளில் விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G) ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் தள்ளுபடியை பற்றி இங்கே விரிவாக காண்போம். விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? க்ரோமாவின் ஆபர் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? என்கிற விவரங்கள் இதோ:

டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கும் Vivo 5G போன்!

தற்போது க்ரோமா வலைத்தளத்தில் விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் எம்ஆர்பி விலையான ரூ.12,499 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 2 கலர் ஆப்ஷன்கள் மீதும் (வைப்ரன்ட் க்ரீன் மற்றும் மெஜெஸ்டிக் பிளாக்) கிடைக்கிறது.

விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? டிஸ்பிளேவை பொறுத்தவரை, விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் (1612 x 720 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 840நிட்ஸ் tபீக் ப்ரைட்னஸையும் வழங்குகிறது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (6nm octa-core MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது. இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ கிட்டத்தட்ட 6ஜிபி வரை அதிகரிக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, விவோ டி3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் ஏஐ-ஆதரவு கொண்ட 50-மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, டிஸ்பிளேவில் உள்ளவாட்டர் டிராப் நாட்ச்சில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா வைக்கப்பட்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 மதிப்பீட்டுடன் வருகிறது. பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் 5ஜி கனெக்டிவிட்டியையும் ஆதரிக்கிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 உடன் அனுப்பப்படுகிறது.

மே 1 முதல் அமேசான் கிரேட் சம்மர் சேலில் அணுக கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடிகள் குறித்த விவரங்கள்:
1. சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S24 Ultra 5G): ரூ.1,34,999 க்கு பதிலாக ரூ.84,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்.
2. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15): ரூ.69,900 க்கு பதிலாக ரூ.57,749 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்.

3. ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R 5G): ரூ.31,999 க்கு பதிலாக ரூ.24,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்.
4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 lite 5G): ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்.
5. ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R): ரூ.44,999 க்கு பதிலாக ரூ.39,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்.
6. ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G): ரூ.15,999 க்கு பதிலாக ரூ.11,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்

7. ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G): ரூ.17,999 க்கு பதிலாக ரூ.13,249 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்.
8. டெக்னோ பாப் 9 (Tecno Pop 9): ரூ.8,499 க்கு பதிலாக ரூ.5,490 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்.
9. ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi): ரூ.54,999 க்கு பதிலாக ரூ.32,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்.
10. சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G): ரூ.24,999 க்கு பதிலாக ரூ.13,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3 Lite 5G Gets Discount At Croma Online Check Out Offer Price Specifications Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X