Home
Mobile

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி3 5ஜி (vivo T3 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக டைமன்சிட்டி சிப்செட், 5000mAh பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன். இப்போது இந்த விவோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ டி3 5ஜி அம்சங்கள் (Vivo T3 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்கள், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் 4எம்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (Octa Core 4nm MediaTek Dimensity 7200) சிப்செட் வசதியுடன் இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14)மூலம் இந்த விவோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + ஃபிளிக்கர் சென்சார் ஆகிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

IP54 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) வசதியுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உடன் இந்த போன் அறிமுகமானது. 5000mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும்காஸ்மிக் ப்ளூ (Cosmic Blue), கிரிஸ்டல் ஃபிளேக் (Cystal Flake)ஆகிய நிறங்களில் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo T3 5G with 8GB RAM available at discounted price on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X