வெளுத்து கட்டுது சேல்.. வெறும் ரூ.16,999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் வெளியான விவோ டி3 5ஜி (Vivo T3 5G) போனானது அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. ஓஐஎஸ் மற்றும் ஈஐஎஸ் டெக்னாலஜி கொண்ட இந்த விவோ டி3 5ஜி போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ டி3 5ஜி பிளிப்கார்ட் சேல் (Vivo T3 5G Flipkart Sale): இந்த விவோவின் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,499 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு மட்டுமல்லாமல், ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, ரூ.16,999 பட்ஜெட்டில் இப்போது வாங்கி கொள்ளலாம். ரூ.3,000 விலை கம்மியாக கிடைக்கிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு, ஆக்சிஸ் கிரெடிட் கார்டு அல்லது எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.2,834 வரையில் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, பீச்சர்களை பார்ப்போம்.
விவோ டி3 5ஜி அம்சங்கள் (Vivo T3 5G Specifications): இந்த விவோவில் டிடி ஸ்டார்2 கிளாஸ் (DT Star2 Glass) பாதுகாப்பு கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.

இதுபோக எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கிடைக்கிறது. 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் இருக்கிறது. இந்த வேரியண்ட்களில் 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த பட்ஜெட் செக்மெண்டில் ஃபாஸ்ட்டஸ்ட் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, ஆக்டா கோர் 4எம்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (Octa Core 4nm MediaTek Dimensity 7200) சிப்செட் கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) மற்றும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த விவோவில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கேபாசிட்டி வருகிறது.
சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + ஃபிளிக்கர் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மட்டுமல்லாமல், ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் வருகிறது. இந்த விவோ போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) மற்றும் IP54 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. இந்த விவோ டி3 5ஜி போனை காஸ்மிக் ப்ளூ (Cosmic Blue), கிரிஸ்டல் ஃபிளேக் (Cystal Flake) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications