Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. ரூ.20000 பட்ஜெட்ல Sony கேமரா.. 44W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் விவோ டி3 5ஜி போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர போகுது மார்க்கெட்.. ரூ.20000 பட்ஜெட்ல Sony கேமரா.. எந்த மாடல்?

விவோ டி3 5ஜி அம்சங்கள் (Vivo T3 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 chipset) வசதியுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த அசத்தலான விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust And Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 2எம்பி பொக்கெ லென்ஸ் (bokeh lens) + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எல்டி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேசமயம் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ( microSD card slot ) ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதிர போகுது மார்க்கெட்.. ரூ.20000 பட்ஜெட்ல Sony கேமரா.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். கிரிஸ்டல் ஃப்ளேக் (Crystal Flake) மற்றும் காஸ்மிக் ப்ளூ (Cosmic Blue) நிறங்களில் இந்த புதிய விவோ விற்பனைக்கு வரும்.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (dual stereo speakers), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3 5G will be launched in India soon with a budget of Rs.20,000: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X