மார்க்கெட்டே அதிர போகுது.. சோனி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புது விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ டி2 ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது. இதை தொடர்ந்து விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனை மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் கூட பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

விவோ டி3 5ஜி அம்சங்கள் (Vivo T3 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 chipset) வசதியுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேசமயம் விடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஃபன்டச் ஓஎஸ் (FunTouch OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கும் வரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) கேமரா + அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், விடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன். இந்த பேட்டரி சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்தியாவில் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








