Home
Mobile

ரூ.4500 டிஸ்கவுண்ட்-ஐ பெற்றவெயிட்டு Vivo 5ஜி போன்.. 8GB ரேம் 50MP OIS கேமரா, 44W சார்ஜிங், 5000mAh பேட்டரி!

விவோ (Vivo) நிறுவனம் அதன் 'பிக்கஸ்ட் பேட்டரி' (Biggest Battery) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை டீஸ் செய்து வருகிறது. அது விவோ டி4 5ஜி (Vivo T4 5G) ஸ்மார்ட்போனாகும். இது 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 7300எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சில தினங்களுக்கு முன் அறிமுகமான ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போனில் நாம் பார்த்ததை போலவே!

ஆனால் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் சரியான இந்திய வெளியீட்டு தேதி (Vivo T4 5G India Launch Date) இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனிற்கு முன்பாக அறிமுகமான விவோ டி3 5ஜி (Vivo T3 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

ரூ.4500 டிஸ்கவுண்ட்-ஐ பெற்றவெயிட்டு Vivo 5ஜி போன்!

பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் (Flipkart), விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.4500 நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.22,999 க்கு பதிலாக ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கிறது.

விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Vivo T4 5G Specifications):
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (Octa-core MediaTek Dimesity 7200 SoC)
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்

- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)
- LED ஃபிளாஷ் யூனிட்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி சென்சார்
- 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In Display Finger Print Sensor)

விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனிற்காக உருவிக்கப்பட்டுள்ள மைக்ரோசைட் வழியாக. இது பெரிய பேட்டரியை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், வேகமான சார்ஜிங்கையும் கொண்டிருக்கும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 90W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விவோவின் துணை நிறுவனமான ஐக்யூ, அதன் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனில் 7300mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. ஐக்யூ நிறுவனம் இதை "இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி ஸ்மார்ட்போன்" என்று கூறுகிறது. தற்போது விவோ நிறுவனமும் அதையே கூறுகிறது. ஆக விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனிலும் 7300mAh பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட் ஆனது, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்டை கொண்டிருக்கும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், எந்த சிப்செட் என்பதை சரியாக குறிப்பிடவில்லை. இதுதவிர்த்து விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வட்டமான மூலைகளையும், செல்பீ கேமராவிற்காக முன்பக்கத்தில் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டையும் கொண்டுள்ளது.

விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000 - ரூ25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் விவோ டி4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3 5G Selling At Discounted Price in Flipkart Ahead Vivo T4 5G India Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X