Home
Mobile

இதுக்கு மேல என்ன வேணும்? Sony கேமரா.. 256GB மெமரி.. 44W சார்ஜிங்.. புதிய விவோ 5ஜி போன் ரெடி..

விவோ நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒவ்வொரு போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் இந்நிறுவனம் விரைவில் கம்மி பட்ஜெட்டில் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது விவோ நிறுவனம் விரைவில் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இதுக்கு மேல என்ன வேணும்? Sony கேமரா.. 256GB மெமரி..புதிய விவோ 5ஜி போன்

விவோ டி3 5ஜி அம்சங்கள் (Vivo T3 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display)வசதியுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200 chipset) வசதியுடன் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

விவோ டி3 5ஜி போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust And Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த அசத்தலான விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 2எம்பி பொக்கெ லென்ஸ் (bokeh lens) + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் எல்டி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேசமயம் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ( microSD card slot ) ஆதரவு இந்த போனில் உள்ளது.

இதுக்கு மேல என்ன வேணும்? Sony கேமரா.. 256GB மெமரி..புதிய விவோ 5ஜி போன்

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. கிரிஸ்டல் ஃப்ளேக் (Crystal Flake) மற்றும் காஸ்மிக் ப்ளூ (Cosmic Blue) நிறங்களில் இந்த புதிய விவோ விற்பனைக்கு வரும்.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (dual stereo speakers) கொண்டுள்ளது விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விவோ போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

source: appuals.com

photo courtesy: gizmochina, appuals.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3 5G India Price, Design, Specifications revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X