தரமான அம்சங்களுடன் விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

விவோ நிறுவனம் புதிய விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ டி2எக்ஸ்

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய iPhone 14 மற்றும் iOS 16 பற்றிய சுவாரசிய தகவல்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ஆப்பிள்?புதிய iPhone 14 மற்றும் iOS 16 பற்றிய சுவாரசிய தகவல்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ஆப்பிள்?

வோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர்

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் OriginOS சார்ந்த ஆண்ட்ராய்டு 12இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!

விவோ டி2எக்ஸ்

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடிபிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

2எக்ஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும்

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் இந்த சாதனம் HyperEngine 3.0 தொழில்நுட்ப ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரூ.11,999 விலையில் ஒரு மார்வலஸ் ஸ்மார்ட்போன் Infinix Note 12.. இன்றே வாங்கிட்டா பெஸ்ட்டுங்க..ரூ.11,999 விலையில் ஒரு மார்வலஸ் ஸ்மார்ட்போன் Infinix Note 12.. இன்றே வாங்கிட்டா பெஸ்ட்டுங்க..

 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ்,

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை CNY 1,799
(இந்திய மதிப்பில் ரூ.21,000) ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை CNY 2,599 (இந்திய மதிப்பில் ரூ.30,300) ஆக உள்ளது. வரும் ஜூன் 6-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன். கண்டிப்பாக இந்த சாதனத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo T2x With MediaTek Dimensity 1300 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X