Home
Mobile

பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் புதிய Vivo 5ஜி போன்: அறிமுக தேதி வெளியானது.!

ஒன்பிளஸ், மோட்டோ, சியோமி போன்ற நிறுவனங்கள் தொடர்ச்சியாக புதிய புதிய 5ஜி போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் விவோ நிறுவனமும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி இந்தியாவில் புதிய விவோ டி2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ டி2: இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ டி2 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது விவோ டி2 ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும்.

பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் புதிய Vivo 5ஜி போன்.!

குறிப்பாக விவோ டி2 ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிரான் 695 5ஜி சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்.

பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் புதிய Vivo 5ஜி போன்.!

அதேபோல் இந்த விவோ டி2 ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ டி2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ வி27இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி27இ:விவோ வி27இ ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 ×1080 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் உடன் ARM Mali-G57 MC2 GPU ஆதரவைக் கொண்டுள்ளது விவோ வி27இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை
இயக்குவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Funtouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13
இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி27இ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
ஆதரவு இதில் உள்ளது.

பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் புதிய Vivo 5ஜி போன்.!

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27இ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

4600 எம்ஏஎச் பேட்டரி வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ வி27இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி
பேக்கப் கொடுக்கும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக்
கொண்டுள்ளது இந்த புதிய போன்.

Best Mobiles in India

English summary
:Vivo T2 smartphone will be launched in India on April 11: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X