கியூ கட்டி வாங்குவீங்க.. 8ஜிபி ரேம்.. 5000mAh பேட்டரி.. கம்மி விலையில் விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் விவோ டி2 5ஜி (Vivo T2 5G), விவோ டி2எக்ஸ் 5ஜி (Vivo T2x 5G) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து விவோ டி2 ப்ரோ (Vivo T2 Pro) ஸ்மார்ட்போனையும் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம்.
வரும் வாரங்களில் இந்த விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய போன் பிளப்கார்ட் வழியே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த விவோ டி2 ப்ரோ போனின் சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.

அதாவது விவோ டி2 ப்ரோ போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் நாட்ச் வடிவ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும். தற்போது விவோ டி2 ப்ரோ போனின் சில விவரங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இதன் முழு விவரங்களும் தெரியவரும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ டி2 5ஜி விவோ டி2எக்ஸ் 5ஜி போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.
விவோ டி2 அம்சங்கள்: விவோ டி2 ஸ்மார்ட்போன் ஆனது 6.38-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 × 1080 பிக்சல்ஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
விவோ டி2 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது. குறிப்பாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.
விவோ டி2 ஸ்மார்ட்போன் 64எம்பி பிமைரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4500 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
விவோ டி2எக்ஸ் அம்சங்கள்: 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 2408 × 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.
மீடியாடெக் Dimensity 6020 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போன். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் போன்.
விவோ டி2 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.18,999-ஆக உள்ளது. அதேபோல் விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் குறைந்த எடையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications