செப்டம்பர் 22 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 64MP கேமரா.. 66W சார்ஜிங்.. வருகிறது விவோ போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக சியோமி, ஒப்போ போன்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான கேமரா வசதியுடன் விவோ போன்கள் வெளிவருகின்றன. எனவே தான் விவோ போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 22-ம் தேதி இந்தியாவில் விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ டி2 ப்ரோ 5ஜி அம்சங்கள்: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோலெட் (curved AMOLE) டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக விவோ டி2 ப்ரோ 5ஜி (vivo T2 Pro 5G) ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200) வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ போன் விற்பனைக்கு வரும்.
66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட் 4200 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த விவோ வி29இ (Vivo V29e) போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
விவோ வி29இ அம்சங்கள்: இந்த விவோ மாடல் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) அமோலெட் (AMOLED ) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 3டி கர்வ்ட் டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிபி-பி3 (DCI-P3) கலர் காமட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவோ போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 64 எம்பி (OIS) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. அதேபோல 50 எம்பி ஏஃஎப் (AF) செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. விவோ வி29இ ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வருகிறது. அதோடு கேமிங் பிரியர்களை கவரும் வகையில் அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பெரிதும் பேசப்படும் அம்சமாக 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner), டைப் - சி ஆடியோ மற்றும் சார்ஜிங் போர்ட் வருகிறது. அதோடு ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), வை-பை 6 802 (Wi-Fi 6 802) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விவோ வி29இ போனின் ஆரம்ப விலை ரூ.26,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








