Home
Mobile

பட்ஜெட் பிரீமியம்.. 64எம்பி கேமரா.. 8ஜிபி ரேம்.. AMOLED டிஸ்பிளே.. மிரட்டும் விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை செப்டம்பர் 22-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு அதன் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இது குறித்து விரிவான தகவலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும்.

64எம்பி கேமரா.. 8ஜிபி ரேம்.. AMOLED டிஸ்பிளே.. மிரட்டும் விவோ போன்..

மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. அதேபோல் விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ டி2 ப்ரோ 5ஜி (vivo T2 Pro 5G) ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimensity 7200) வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீக்பெஞ்சில் விவோ டி2 ப்ரோ 5ஜி போனின் மாடல் எண் ஏ2321 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மறறும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த போன்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்டு அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4200 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்குத் தகுந்த அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இந்த போனில் உள்ளது.

64எம்பி கேமரா.. 8ஜிபி ரேம்.. AMOLED டிஸ்பிளே.. மிரட்டும் விவோ போன்..

64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் இந்த விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த அசத்தலான ஸ்மர்ரட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

5ஜி, 4ஜி வோல்டஇ, யுஎஸ்பி டைப்-சி, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த புதிய விவோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T2 Pro 5G key specifications leaked on Geekbench ahead of launch: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X