Home
Mobile

பட்ஜெட் விலை.. மாஸ் காட்டும் டிசைன்.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. அசத்தும் விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தற்போது விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. அதாவது இந்த போன் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவோ டி2 ப்ரோ 5ஜி போனின் விலை மற்றும் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.23,999 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விவோ டி2 ப்ரோ போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 (MediaTek Dimensity 7200) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாகப் பயன்படும்.

மாஸ் காட்டும் டிசைன்.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. அசத்தும் விவோ போன்

குறிப்பாக இந்த விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் விவோ டி2 ப்ரோ 5ஜி போன்.

தற்போது விவோ டி2 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் மட்டுமே இணையதளத்தில் கசிந்துள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து விவரங்களும் தெரியவரும். மேலும் விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y78m (Vivo Y78m) ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்

விவோ Y78m அம்சங்கள்: 6.64-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+)டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ Y78m போன் வெளிவந்துள்ளது. அதேபோல்1080 x 2388 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 19.9:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

விவோ Y78m ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனில் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

மாஸ் காட்டும் டிசைன்.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. அசத்தும் விவோ போன்

ஆக்டோ-கோர் மீடியாடெக் 7020 சிப்செட் (Dimensity 7020 chipset) உடன் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு ஆதரவு இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வேகம் மற்றும் செயல்திறன் தரும். மேலும் OriginOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ Y78m போன் வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் +256ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய விவோ போன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

விவோ Y78m ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதி உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் கைரேகை ஸகேனர் ஆதரவுடன் விவோ Y78m ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஸ்எஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ Y78m போன். மேலும் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை 1,999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.22,900) ஆகும். தற்போது இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo T2 Pro 5G India price leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X