Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. 64எம்பி கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. பட்ஜெட் விலையில் விவோ போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் சமீபத்தில் விவோ டி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் விவோ டி2 ப்ரோ ஸ்மார்போன் இன்று முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.

அதாவது விவோ டி2 ப்ரோ 5ஜி (Vivo T2 Pro 5G) ஸ்மார்ட்போன் மாலை 7 மணிக்கு பிளிக்கார்ட் மற்றும் விவோ ஸ்டோரில் விற்பனைக்கு வர இருக்கிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி2 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டடின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.

64எம்பி கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. பட்ஜெட் விலையில் விவோ போன்..

அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர நோ காஸ்ட் இஎம்ஐ முறையிலும் இந்த விவோ டி2 ப்ரோ 5ஜி போனை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ டி2 ப்ரோ மாடல் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (Full HD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ டி2 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் வருகிறது. அதோடு ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) மற்றும் மாலி - ஜி610 எம்சி4 ஜிபியு (Mali-G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ டி2 ப்ரோ டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சாருடன் கூடிய 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் அரோரா லைட் (Aura light) இடம் பெற்றுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

64எம்பி கேமரா.. 66W ஃபாஸ்ட் சார்ஜிங்.. பட்ஜெட் விலையில் விவோ போன்..

66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி கொண்டுள்ளது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) வருகிறது. மேலும், டைப் - சி ஆடியோ (Type-C audio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) கொண்டிருக்கிறது.

இந்த விவோ போனில் 5ஜி என்எஸ்ஏ (5G NSA), டூயல் 4ஜி (Dual 4G), வை-பை 802 (Wi-Fi 6 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த மாடலில் நியூ மூன் பிளாக் (New Moon Black) மற்றும் டூன் கோல்டு (Dune Gold ) ஆகிய 2 கலர்கள் உள்ளன.

அதேபோல் இந்த விவோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T2 Pro 5G goes on sale today for the first time in India: check price, specifications, availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X