Home
Mobile

ஆர்டர் கொட்டுது.. ரூ.2000 டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.21,999 போதும்.. AURO எல்இடி.. SAMSUNG கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் முழுதாக ரூ.2000 டிஸ்கவுண்ட்டில் 16ஜிபி ரேம், சாம்சங் சென்சார் கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், கார்வ்ட் டிஸ்பிளே போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களை கொண்ட விவோ டி2 ப்ரோ (Vivo T2 Pro) போன் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

விவோ டி2 ப்ரோ அம்சங்கள் (Vivo T2 Pro Specifications): இந்த விவோ மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் மற்றும் மாலி - ஜி610 எம்சி4 ஜிபியு (Mali-G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.21,999 போதும்.. AURO எல்இடி.. SAMSUNG கேமரா போன்!

அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) வருகிறது. இந்த விவோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதோடு 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ போனில் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (Full HD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த மாடல் மிகவும் ஸ்லிம் டிசைன் கொண்டிருப்பதால், 4600mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டிருக்கிறது.

வெறும் ரூ.21,999 போதும்.. AURO எல்இடி.. SAMSUNG கேமரா போன்!

இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வருகிறது. மேலும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) மற்றும் டைப் - சி ஆடியோ (Type-C audio) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த விவோ போனில் பக்காவான டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. அதோடு அரா எல்இடி லைட் (Aura LED Light) இடம் பெற்றுள்ளது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த விவோ போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 802 (Wi-Fi 6 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன. அதோடு 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி (Dual 4G) சப்போர்ட் உள்ளது. இந்த போன் நியூ மூன் பிளாக் (New Moon Black) மற்றும் டூன் கோல்டு (Dune Gold ) ஆகிய 2 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அதிரடி டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுதாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஆகவே, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.21,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T2 Pro 5G 16GB RAM, Dimensity 7200 Sale With Offer in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X