Home
Mobile

பொறி பறக்கும் டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.21,999 பட்ஜெட்ல 16GB ரேம்.. 64MP கேமரா.. 4600mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 64 எம்பி கேமரா, 65W ஃபாஸ்ட் சார்ஜிங், 4600mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும், விவோ டி2 ப்ரோ (Vivo T2 Pro) போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

விவோ டி2 ப்ரோ அம்சங்கள் (Vivo T2 Pro Specifications): இந்த விவோ மாடல் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (Full HD) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

வெறும் ரூ.21,999 பட்ஜெட்ல 16GB ரேம்.. 64MP கேமரா.. 4600mAh பேட்டரி!

அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் வருகிறது.

அதோடு ஃபன்டச்ஓஎஸ் 13 (FuntouchOS 13) மற்றும் மாலி - ஜி610 எம்சி4 ஜிபியு (Mali-G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர விருக்கின்றன.

இந்த விவோ மாடல் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சாருடன் கூடிய 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் அரோரா லைட் (Aura light) இடம் பெற்றுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4600mAh பேட்டரி கொண்டுள்ளது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) வருகிறது. மேலும், டைப் - சி ஆடியோ (Type-C audio), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) கொண்டிருக்கிறது.

இந்த விவோ போனில் 5ஜி என்எஸ்ஏ (5G NSA), டூயல் 4ஜி (Dual 4G), வை-பை 802 (Wi-Fi 6 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த மாடலில் நியூ மூன் பிளாக் (New Moon Black) மற்றும் டூன் கோல்டு (Dune Gold ) ஆகிய 2 கலர்கள் உள்ளன.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று (செப்டம்பர் 22) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 29ஆம் தேதி இரவு 7 மணி முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனை விவோ.காம் (Vivo.com) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கு ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். அதோடு ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 8 ஜிபி மாடலை வெறும் ரூ.21,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T2 Pro 5G 16GB RAM, Dimensity 7200 Sale From September 29 Flipkart in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X