மே 23: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!
விவோ நிறுவனம் வரும் மே 23-ம் தேதி விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ டி2 5ஜி
விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனில் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.
விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

இந்த விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர்
மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y01 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ Y01
விவோ Y01 ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் Halo FullView ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய விவோ Y01 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிரபார்த்த மீடியாடெக் பி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 கோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வோ Y01 ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
விவோ Y01 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ Y01 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எலிகன்ட் பிளாக் மற்றும் சபையர் ப்ளூ நிறங்களில் அந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், யுஎஸ்பி ஒடிஜி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y01 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications