Home
Mobile

ஒரு கல்லுல ரெண்டு மாங்கா.. புதிய 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vivo.!

ஒரு கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல் ஒரே நேரத்தில் இரண்டு 5ஜி போன்களை இறக்கிவிட்டு அதிரடி காட்டியுள்ளது விவோ நிறுவனம். அதாவது விவோ நிறுவனம் விவோ டி2 5ஜி, விவோ டி2எக்ஸ் 5ஜி என்ற இரண்டு ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

விவோ டி2 அம்சங்கள்: விவோ டி2 ஸ்மார்ட்போன் ஆனது 6.38-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2400 × 1080 பிக்சல்ஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 புதிய 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Vivo.!

இந்த புதிய விவோ டி2 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது. குறிப்பாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

புதிய விவோ டி2 ஸ்மார்ட்போன் 64எம்பி பிமைரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4500 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

விவோ டி2எக்ஸ் அம்சங்கள்: 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 2408 × 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் Dimensity 6020 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போன். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

 புதிய 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Vivo.!

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் போன்.

விவோ டி2 விலை: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி2 போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. குறிப்பாக வெலாசிட்டி வேவ் மற்றும் நைட்ரோ பிளேஸ் நிறங்களில் இந்த விவோ டி2 போன் வெளிவந்துள்ளது. இந்த விவோ டி2 போன் பிளிப்கார்ட் தளத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

 புதிய 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Vivo.!

விவோ டி2எக்ஸ் விலை: 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி2எக்ஸ் போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி2எக்ஸ் மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. மரைன் ப்ளூ, அரோரா கோல்ட் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த விவோ போன் கிடைக்கும். இந்த விவோ டி2எக்ஸ் போன் பிளிப்கார்ட் தளத்தில் வரும் ஏப்ரல் 21-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T2 5G, Vivo T2x 5G phones launched in India: Check Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X