Home
Mobile

இப்படி ஒரு விவோ 5ஜி போனுக்கு வெயிட் பண்ணலாம் தப்பே இல்ல.!

விவோ நிறுவனம் விரைவில் Vivo Y100 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்நிறுவனம் விவோ டி2 5ஜி எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

விவோ டி2 5ஜி போன்

குறிப்பாக விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இணையத்தில் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றிய சற்று விரிவாகப் பார்ப்போம்.

இப்படி ஒரு விவோ 5ஜி போனுக்கு வெயிட் பண்ணலாம் தப்பே இல்ல.!

விவோ டி2 5ஜி அம்சங்கள்

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றம் வேகம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானால் நம்பி வாங்கலாம்.

விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது விவோ டி2 5ஜி.

அதேபோல் விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போனில் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080×2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். குறிப்பாக இந்த விவோ டி2 5ஜி போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பின்பு இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Vivo Y35m ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

இப்படி ஒரு விவோ 5ஜி போனுக்கு வெயிட் பண்ணலாம் தப்பே இல்ல.!

விவோ Y35m ஸ்மார்ட்போன் அம்சங்கள்

விவோ Y35m ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் கேமிங் வசதிகளுக்கு மிக அருமையாக உதவும். பின்பு 720 x 1600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ Y35m ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இதற்குப் பதிலாக 50எம்பி ரியர் கேமரா இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன்.

இப்படி ஒரு விவோ 5ஜி போனுக்கு வெயிட் பண்ணலாம் தப்பே இல்ல.!

விவோ Y35m ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸடோரேஜ் வசதி உள்ளது. டான் கோல்ட், ஐஸ் கிளவுட் ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக்நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ Y35m ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T2 5G smartphone will be launched with Snapdragon 695 chipset: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X