Home
Mobile

ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் களமிறங்கும் புதிய விவோ 5ஜி ஸ்மார்ட்போன்கள்: முழு விவரம்.!

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது.

விவோ டி2 5ஜி சீரிஸ்: இந்நிலையில் விவோ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, வரும் ஏப்ரல் மாதம் துவக்கத்தில் விவோ டி2 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். குறிப்பாக இந்த விவோ டி2 5ஜி சீரிஸ் மாடல்கள் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும்.

ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் களமிறங்கும் புதிய விவோ 5ஜிபோன்கள்.!

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய விவோ டி2 5ஜி போன் வெளிவரும்.

குறிப்பாக விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். அதேபோல் ரூ.20,000-க்கு கீழ் இந்த விவோ டி2 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது விவோ டி2 5ஜி போன். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ வி27 போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் களமிறங்கும் புதிய விவோ 5ஜிபோன்கள்.!

விவோ வி27 5ஜி : விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான விவோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் Dimensity 7200 5G SoC சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

8ஜிபி/12ஜிபிரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி275ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய விவோ போனின் எடை 180 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது குறைந்த எடை கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களிலும் எடுத்துச் சென்று பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் களமிறங்கும் புதிய விவோ 5ஜிபோன்கள்.!

விவோ வி27 5ஜி ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி27 5ஜி போனின் விலை ரூ.32,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் ரூ.36,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T2 5G series smartphones under Rs 20,000 will be launched soon in India: full Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X