Home
Mobile

இந்த Vivo போனுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா?

விவோ நிறுவனம் கடந்த சில மாதங்களில் அதிகமான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்து சலிப்படைந்ததால் ஒரு அசத்தலான 4ஜி விவோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

 விவோ டி1எக்ஸ்

விவோ டி1எக்ஸ்

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ டி1எக்ஸ் (Vivo T1x) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால்இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விவோ டி1எக்ஸ் டிஸ்பிளே

விவோ டி1எக்ஸ் டிஸ்பிளே

இப்போது விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

பின்பு 1,080x2,408 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்வெளிவரும் விவோ டி1எக்ஸ்.

குறிப்பாக இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் கேமிங் மற்றும் வீடியோ வசதிகளுக்கு மிக அருமையாகபயன்படும். மற்ற நிறுவனங்களை விட விவோ நிறுவனம் டிஸ்பிளேவில் அதிக கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் மெமரிகார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

இந்த புதிய விவோ போனில் 64எம்பி பிரைமரி சென்சார் ( f/1.79 லென்ஸ்) + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன். ஆனால் 8எம்பி செல்பி கேமராவுக்கு பதிலாக 16எம்பி அல்லது 32எம்பி கேமராக்கள் இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன்.

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான அனைத்து விவோ ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி இடம்பெறும். எனவே கேமிங் பயனர்கள்இதை நம்பி தேர்வுசெய்யலாம்.

குறிப்பாக இந்த சிப்செட் இன் செயல்திறன் மிக அருமையாக இருக்கும் என்றே கூறலாம். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

இந்த புதிய விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தபுதிய விவோ ஸ்மார்ட்போன்.

விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன்

4ஜி, வைஃபை, புளூடூத் வி5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி விருப்பங்களை கொண்டுள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo T1x May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X