Home
Mobile

120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5ஜி ஆதரவுடன் விவோ டி1, டி1 எக்ஸ்: அந்த போனுக்கே டஃப் கொடுக்கும் போல!

விவோ டி1, விவோ டி1எக்ஸ் ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5ஜி இணைப்புடன் வருகிறது. இதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். விவோ டி1 ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்புப்படி ரூ.25,800 ஆகவும் விவோ டி1 எக்ஸ் சாதனமானது இந்திய மதிப்புப்படி ரூ.19,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவோ டி1 மற்றும் விவோ டி1 எக்ஸ் ஸ்மார்ட்போன்

விவோ டி1 மற்றும் விவோ டி1 எக்ஸ் ஸ்மார்ட்போன்

விவோ டி1 மற்றும் விவோ டி1 எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 256 ஜிபி உள்சேமிப்புடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் விவோ டி1 இரட்டை பின்புற கேமராக்கள் மற்று்ம வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் வசதியோடு வருகிறது. விவோ டி1 எக்ஸ் மூன்று பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. துளை பஞ்ச் காட்சி வடிவமைப்பை இது கொண்டுள்ளது. புதிய விவோ டி1 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. விவோ டி1 எக்ஸ் மீடியாடெக் டைமன்சிட்டி 900 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

விவோ டி1 விலை

விவோ டி1 விலை

விவோ டி1, விவோ டி1 எக்ஸ் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.25800 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியின் விலை ரூ.28,100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.30,400 ஆக இருக்கிறது.

விவோ டி1 எக்ஸ் விலை

விவோ டி1 எக்ஸ் விலை

விவோ டி1 எக்ஸ் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.19,900 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.21100 ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.23,400 ஆக இருக்கிறது. விவோ டி1 மற்றும் விவோ டி1 எக்ஸ் ஸ்மார்ட்போனானது சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. அதேபோல் நவம்பர் 1 முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

விவோ டி1 சிறப்பம்சங்கள்

விவோ டி1 சிறப்பம்சங்கள்

விவோ டி1 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) ஆதரவோடு வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் பிரகாச விகிதத்தை கொண்டுள்ளது. அதேபோல் 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இது ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியும் இருக்கிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

விவோ டி1 எக்ஸ் சிறப்பம்சங்கள்

விவோ டி1 எக்ஸ் சிறப்பம்சங்கள்

விவோ டி1 எக்ஸ் ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 1,080x2,408 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 900 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இது 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா என இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்பி வசதிக்கென 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Vivo T1, Vivo T1x Smartphone Launched With 120 Hz Display, Android 11 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X