Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.!

விவோ நிறுவனம் விரைவில் விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன்மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சாதனம் 2400×1080 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும்.

 புதிய ஸ்மார்ட்போன் குவால்

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் ஆதரவுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புற

புதிய விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். அதேபோல் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த
புதிய விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ Y21eஸ்மார்ட்போனின்
அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ Y21e

விவோ Y21e

விவோ Y21e ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி Halo Full View டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ Y21e ஸ்மார்ட்போன்

விவோ Y21e ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல். அதேபோல் எல்இடி பிளாஷ், போர்ட்ரெய்ட் மோட், சூப்பர் HDR மற்றும் ஃபேஸ் பியூட்டி மோட்போன்ற பல கேமரா அம்சங்களைவழங்குகிறது இந்த சாதனம்.

விவோ டி1 5ஜி

இந்த விவோ Y21e ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும். மேலும் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தஅசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 5000

விவோ Y21e ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த புதிய விவோ Y21e ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.விவோY21e ஸ்மார்ட்போன் ஆனது டயமண்ட் க்ளோ மற்றும் மிட்நைட் ப்ளூ நிறங்களில் கிடைக்கும். அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y21e ஸ்மார்ட்போன் மாடலை ரூ.12,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்தை விவோ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில ஆஃப்லைன் தளங்களில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Vivo T1 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X