Home
Mobile

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50எம்பி கேமராவுடன் விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! பட்ஜெட் விலை! விற்பனை தேதி

விவோ நிறுவனம் புதிய விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ டி1 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ரூ.15,990-விலையில் வாங்க முடியும். அதேபோல்6ஜிபி ரேம் மறறும் 128ஜபி மெமரி கொண்ட விவோ டி1 5ஜி மாடலை ரூ.16,990-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரிகொண்ட விவோ டி1 5ஜி மாடலை ரூ.19,990-விலையிலும் வாங்க முடியும்.

 கார்டுகளை பயன்படுத்தி

குறிப்பாக இந்த விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனை வரும் பிப்ரவரி 14-ம் தேதி பிளிப்கார்ட் உள்ளிட்ட சில தளங்களில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனம் 1,080x2,408 பிக்சல்கள் தீ

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 1,080x2,408 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

 டி1 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கு

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் FunTouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன்.

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம்

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் ( f/1.8 aperture) + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

மார்ட்போனில் 5000 எம்

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம், இணையம் போன்றவற்றை பயன்படுத்த முடியும். மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூ

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி ஒடிஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 187 கிராம் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo T1 5G Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X