ரூ.8,000 பட்ஜெட்ல இப்படி ஒரு VIVO Phone-ஆ.. 6.56-இன்ச் டிஸ்பிளே, 13MP கேமரா, 5000mAh பேட்டரி, IP54 ரேட்டிங்!
Vivo Y18i 4G: விவோ நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு ஸ்மார்ட்போனா என்று ஆச்சரியப்படுத்தும் விலை மற்றும் அம்சங்களுடன் விவோ ஒய்18ஐ 4ஜி (Vivo Y18i 4G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரியுடன் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் - ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளே, 13 மெகாபிக்சல் ரியர் கேமரா, தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் என.. விலையை மீறிய பல முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
விவோ நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு ஸ்மார்ட்போனா என்று ஆச்சரியப்படுத்தும் விலை மற்றும் அம்சங்களுடன் விவோ ஒய்18ஐ 4ஜி (Vivo Y18i) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரியுடன் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 13 மெகாபிக்சல் ரியர் கேமரா, தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் உட்பட.. விலையை மீறிய பல முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

விரிவான அம்சங்களை பொறுத்தவரை, விவோ ஒய்18ஐ 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவுடன் (Dual SIM Support) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கொண்டு இயங்குகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 720 x 1612 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் மற்றும் 90 ஹெர்ட்ஸ்-க்கு இடையிலான ரெஃப்ரெஷ் ரேட் (Refresh rate ranges between 60Hz and 90Hz) மற்றும் 528 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness) உடனான 6.56 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை (HD+ LCD) கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை 12 என்எம் ஆக்டா கோர் யுனிசாக் டி612 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது f/2.2 அபெர்க்ஷர் உடனான 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 0.08-மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா (f/3.0) என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா (f/2.2) உள்ளது
மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் (MicroSD card slo) வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போனில் 64ஜிபி eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இதில் வைஃபை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5 (Bluetooth 5,), ஜிபிஎஸ் (GPS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C port) ஆகியவைகளை கொண்டுள்ளது
சென்சார்களை பொறுத்தவரை ஆக்ஸலரோமீட்டர் (Accelerometer), ப்ராக்ஸிமிட்டி சென்சார் (Proximity sensor) மற்றும் ஆம்பியண்ட் லைட் சென்சார் (Ambient light sensor) உள்ளிட்ட சென்சார்களை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, விவோ ஒய்18ஐ 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 15W வேகத்தில் சார்ஜ் ஆகக்கூடிய 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
மேலும் முன்னரே குறிப்பிட்டபடி விவோ ஒய்18ஐ 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 மதிப்பீட்டையும் ( IP54 rating for dust and water resistance) கொண்டுள்ளது. கடைசியாக, அளவீட்டில் இது 163.63 x 75.58 x 8.39 மிமீ மற்றும் எடையில் 185 கிராம் உள்ளது.
இந்தியாவில் விவோ ஒய்18ஐ விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் விவோ ஒய்18ஐ ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆகும்.இதன் விலை ரூ.7,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது ஜெம் கிரீன் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. இது ஏற்கனவே விவோ நிறுவனத்தின் இ-ஸ்டோர் (Vivo e-store), அமேசான் இந்தியா (Amazon India), பிளிப்கார்ட் (Flipkar) மற்றும் குரோமா (Croma) போன்ற ரீடெயில் விற்பனையாளர்கள் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








