சைலண்டாக Vivo செய்த சம்பவம்: 50MP கேமரா உடன் பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
Vivo நிறுவனம் சைலண்டாக புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது Vivo Y35 4G ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் SoC மற்றும் 44W FlashCharge உடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

Vivo Y35 4G ஸ்மார்ட்போன் அறிமுகம்
விவோ நிறுவனம் பட்ஜெட் விலைப் பிரிவில் Vivo Y35 4G என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆடம்பர தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதோடு மேம்பட்ட சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 680 SoC ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Vivo Y35 4G சிறப்பம்சங்கள்
முன்னதாகவே குறிப்பிட்டது போல் இந்த ஸ்மார்ட்போன் ப்ரீமியம் லுக்கில் இருக்கிறது. இதன் பின்புற தோற்றமானது மிகச் சிறப்பாக உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பெரிய கேமரா தொகுதி சதுர வடிவில் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவை சுற்றியுள்ள மூன்று பக்கங்களில் மெல்லிய பெசல்கள் உள்ளது. இது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவை பிரமாண்டமாக காட்டுகிறது. டிஸ்ப்ளே கீழ் புறத்தில் மட்டும் குறிப்பிடத்தக்க அளவு கொண்ட பெசல்கள் உள்ளது.

6.58 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
Vivo Y35 4G ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஃபுல் எச்டி+ தெளிவுத்திறன் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே
Vivo Y35 4G ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் ஃபுல் எச்டி+ தெளிவுத்திறன் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா
Vivo Y35 4G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பெரிய கேமரா தொகுதி பொருத்தப்பட்டுள்ளது. இதில் டிரிபிள் கேமரா இடம்பெற்றிருக்கிறது. அது 50 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகும்.
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் 50 எம்பி கேமரா என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி ஆதரவுக்கு என 8 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. பின்புற கேமரா உடன் ஒப்பிடும் போது செல்பி கேமரா லென்ஸ் மெகாபிக்சல் சற்று குறைவுதான்.

Qualcomm Snapdragon 680 SoC சிப்செட்
Vivo Y35 4G ஸ்மார்ட்போனில் முன்னதாக குறிப்பிட்டது போல் மேம்பட்ட சிப்செட் ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழான Qualcomm Snapdragon 680 SoC மூலம் இயக்கப்படுகிறது.
இந்த சிப்செட் ஸ்மார்ட்போனை மிக சௌகரியமான முறையில் இயக்க உதவும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
Vivo Y35 4G ஸ்மார்ட்போனில் மிகப் பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது நீடித்த பேட்டரி ஆயுளை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதற்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்துக்கு என USB Type-C போர்ட் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 OS
ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவும் உள்ளது. இதில் உள்ள மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 OS அடிப்படையிலான Funtouch OS 12 மூலம் இயக்கப்படுகிறது.

Vivo Y35 4G விலை
Vivo Y35 4G ஸ்மார்ட்போனானது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா உட்பட உலகளாவிய வெளியீடு குறித்து நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடான 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை இந்தோனேசியாவில் IDR 3,399,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.18,328 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்ட் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications