மார்ச் 3: இந்தியாவில் அறிமுகமாகும் விவோ எஸ்9.! என்னென்ன அம்சங்கள்?

|

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலை வரும் மார்ச் 3-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும்
ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே

6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே

விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம்
மற்றும் 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

மாடல் நம்பர் V2072A

விவோ எஸ்9 5ஜி சாதனத்தின் மாடல் நம்பர் V2072A என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம்மற்றும்வீடியோக்கள் போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் ஒரு காதல்தான்: அலுவலக வீடியோகாலில் இருந்த கணவர்., திடீரென வந்த மனைவி- வைரல் வீடியோ!எல்லாம் ஒரு காதல்தான்: அலுவலக வீடியோகாலில் இருந்த கணவர்., திடீரென வந்த மனைவி- வைரல் வீடியோ!

மூன்று ரியர் கேமராக்கள்

மூன்று ரியர் கேமராக்கள்

வெளிவந்த தகவலின்படி இந்த விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 44எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி

6ஜிபி/8ஜிபி ரேம் வசதி

விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

Dimensity 1100 SoC உடன்

இந்த ஸ்மார்ட்போனில் Dimensity 1100 SoC உடன் ஆக்டோ-கோர் சிபியு வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்படும் என்றும், பின்பு இதை சார்ஜ் செய்ய 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்அறிமுகமாகும்.

ள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள்

வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி, ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. மேலும் கைரேகை சென்சார் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo S9 with 64 Mega Pixel Camera Launching in India on March 3: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X