Home
Mobile

அசத்தலான சிப்செட் வசதியுடன் விரைவில் களமிறங்கும் விவோ எஸ்9.!

விவோ நிறுவனம் வரும் மார்ச் 3-ம் தேதி மிகவும் எதிர்பார்த்த விவோ எஸ்9 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்பின்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது இந்நிறுவனம். தற்சமயம் இந்நிறுவனம் விவோ எஸ்9 அறிமுகம் சார்ந்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 விவோ எஸ்9 ஸ்மார்ட்போன்

விவோ எஸ்9 ஸ்மார்ட்போன்

குறிப்பாக சீனாவில் விவோ வலைத்தளத்தில் இந்த சாதனத்தை முன்புபதிவு செய்யமுடியும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.மேலும் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே

6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே

விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

மாடல் நம்பர் V2072A

விவோ எஸ்9 5ஜி சாதனத்தின் மாடல் நம்பர் V2072A என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோக்கள் போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 44எம்பி டூயல் செல்பீ கேமரா

44எம்பி டூயல் செல்பீ கேமரா

வெளிவந்த தகவலின்படி இந்த விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று ரியர் கேமராக்கள்இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 44எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி

விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக

இந்த ஸ்மார்ட்போனில் Dimensity 1100 SoC உடன் ஆக்டோ-கோர் சிபியு வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்படும் என்றும், பின்பு இதை சார்ஜ் செய்ய 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
Vivo S9 with 44MP selfie camera Launching in India on March 3: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X