Home
Mobile

44எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் விவோ எஸ்9.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்9 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பு அம்சங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 44எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் எனபதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

 6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே

6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே

விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

 மாடல் நம்பர் V2072A

விவோ எஸ்9 5ஜி சாதனத்தின் மாடல் நம்பர் V2072A என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோக்கள் போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

44எம்பி டூயல் செல்பீ கேமரா

44எம்பி டூயல் செல்பீ கேமரா

வெளிவந்த தகவலின்படி இந்த விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 44எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

6ஜிபி/8ஜிபி ரேம் வசதி

6ஜிபி/8ஜிபி ரேம் வசதி

விவோ எஸ்9 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ஆக்டோ-கோர் சிபியு வசதி

இந்த ஸ்மார்ட்போனில் Dimensity 1100 SoC உடன் ஆக்டோ-கோர் சிபியு வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்படும் என்றும், பின்பு இதை சார்ஜ் செய்ய 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

யூஎஸ்பி, ஆடியோ ஜாக்,

வைஃபை, மைக்ரோ யூஎஸ்பி, ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. மேலும் கைரேகை சென்சார் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo S9 May Launching Soon in India: Here the Details!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X