Home
Mobile

விவோ எஸ் 9 வெளியீட்டு தேதி, விவரக்குறிப்புகள் வெளியானது.. அறிமுகம் எப்போ தெரியுமா?

விவோ நிறுவனம் அதன் விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அடுத்தபடியாக புதிய விவோ எஸ் 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து விவோ எஸ் 9 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய நிறுவனம் மும்முரம் காட்டிவருகிறது.

விவோ எஸ் 9 வெளியீட்டு தேதி, விவரக்குறிப்புகள் வெளியானது..

தற்பொழுது வெளியாகியுள்ள டிப்ஸ்டர் தகவலின் படி, விவோ எஸ் 9 ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 6ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி மட்டுமின்றி இந்த புதிய ஸ்மார்ட்போனில் என்ன முக்கிய சிறப்பம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற சில தகவலையும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.

கடந்த விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல் போலவே இந்த புதிய விவோ எஸ் 9 போனிலும் டூயல் செல்பி கேமரா அமைப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த புதிய ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 1100 ஆல் இயக்கப்படலாம் என்றும், மேலும் இந்த SoC ஆல் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக விவோ எஸ் 9 இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீடியா டெக் டைமன்சிட்டி 1100 சிப்செட் கடந்த மாதம் மீடியா டெக் டைமன்சிட்டி 1200 சிப்செட் உடன்
சேர்த்து தயாரிப்பாளரால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ, சியோமி, ரியல்மி மற்றும் ஒப்போ போன்ற உற்பத்தியாளர்கள் அந்தந்த ஸ்மார்ட்போன்களில் இந்த சிப்பைக் கொண்டிருக்கும் OEM-களாக இருப்பார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதேபோல், விவோ எஸ் 9 ஸ்மார்ட்போன், 6.4' இன்ச் டிஸ்பிளே மற்றும் இரட்டை செல்ஃபி கேமரா அமைப்புடன் 44 மெகா பிக்சல் பிரைமரி லென்ஸையும், 8 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் சென்சாரையும் கொண்டு வெளிவரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வரும் களங்களில் அதையும் டிப்ஸ்டர் லீக் செய்வார் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo S9 launch date, specifications tipped on internet by tipster : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X