முன்பதிவு தொடக்கம்: சிறந்த அம்சங்களோடு மார்ச் 3 அறிமுகமாகும் விவோ எஸ் 9!

|

விவோ எஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முன்கூட்டிய முன்பதிவு சீனாவில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பட்டியலின் மூலம் இந்த வரவிருக்கும் விவோ புதிய மாடலின் ஸ்மார்ட்போன்கள் குறித்த ரெண்டர்கள் இருக்கின்றன.

விவோ எஸ் 9 சீரிஸ்

விவோ எஸ் 9 சீரிஸ்

விவோ எஸ் 9 சீரிஸ் மார்ச் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விவோ எஸ் 9 தொடரில் விவோ எஸ் 9இ அடங்கும் என வெய்போ தகவல் தெரிவிக்கிறது. விவோ எஸ்9 வாட்டர் டவுன் பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்போதே முன்பதிவு செய்யலாம்

இப்போதே முன்பதிவு செய்யலாம்

சீனாவின் விவோ இணையதளத்தில் முன்பதிவு செய்யும் பக்கத்தில் விவோ எஸ் 9-ன் தெளிவான தோற்றம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐபோன் 12 சீரிஸ் போன்றே இந்த ஸ்மார்ட்போனும் தடிமனான விளிம்புகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

செவ்வக வடிவ மூன்று கேமரா

செவ்வக வடிவ மூன்று கேமரா

பின்புறத்தில் செவ்வக வடிவ மூன்று கேமராக்களை கொண்டிருக்கிறது. விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போன் போன்ற பல ஸ்மார்ட்போன்களின் பின்புற கேமராக்களுக்கு ஒத்ததாக இந்த கேமரா வடிவமைப்பு இருக்கிறது. மூன்று வண்ணங்களில் விவோ எஸ் 9 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதிரடி காட்டும் அமேசான்: பாதி விலையில் ஏசி, ஃப்ரிட்ஜ், ஏர் கூலர்கள்- சம்மர் ஃபெஸ்ட் அறிவிப்பு!அதிரடி காட்டும் அமேசான்: பாதி விலையில் ஏசி, ஃப்ரிட்ஜ், ஏர் கூலர்கள்- சம்மர் ஃபெஸ்ட் அறிவிப்பு!

44 மெகாபிக்சல் செல்பி கேமரா

44 மெகாபிக்சல் செல்பி கேமரா

விவோ எஸ் 9 கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 44 மெகாபிக்சல் செல்பி கேமராவும், விவோ எஸ் 9 இ மாடலில் 32 மெகாபிக்சல் கேமரா இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விவோ எஸ் 9 இ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு

விவோ எஸ் 9 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை செல்பி கேமராக்களுடன் வரலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆக்டோகோர் மீடியாடெக் 1100 எஸ்ஓசி செயலி

ஆக்டோகோர் மீடியாடெக் 1100 எஸ்ஓசி செயலி

விவோ எஸ் 9 ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் 1100 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படலாம் எனவும் இதில் 44 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

4100 எம்ஏஎச் பேட்டரி

4100 எம்ஏஎச் பேட்டரி

விவோ எஸ்9 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்டவைகள் இடம்பெறலாம். விவோ எஸ் 9இ மாடலில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் மீடியாடெக் 820 எஸ்ஓசி செயலி, 4100 எம்ஏஎச் பேட்டரி 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Vivo S9 Confirmed to Launch on March 3: Pre bookings Opened in Vivo Official Website

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo S9 Confirmed to Launch on March 3: Pre bookings Opened in Vivo Official Website

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X