Home
Mobile

மீடியா டெக் டைமன்சிட்டி 820 சிப்செட் உடன் விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போன்!

விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 820 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியோடு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

விவோ எஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

விவோ எஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் அதன் எஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. விவோ எஸ் 7 மற்றும் விவோ எஸ் 7இ 5ஜி ஸ்மார்ட்போன்களை எஸ்7 சீரிஸின் கீழ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் அறிமுகப்படுத்தியது.

விவோ எஸ்7 டி ஸ்மார்ட்போன்

விவோ எஸ்7 டி ஸ்மார்ட்போன்

இந்தநிலையில் விவோ நிறுவனம் எஸ் 7 தொடரில் விவோ எஸ்7 டி என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. விவோ நிறுவனம் முன்னதாகவே எஸ் 7 தொடரின் கீழ் விவோ எஸ்7 மற்றும் எஸ்7இ 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

மூன்றாவது மாடலாக விவோ எஸ் 7டி

மூன்றாவது மாடலாக விவோ எஸ் 7டி

இந்தநிலையில் விவோ எஸ் 7 வரிசையில் மூன்றாவது மாடலாக விவோ எஸ் 7 டி எனப்படும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக டிப்ஸ்டர் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 820 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல்

டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல்

கூடுதலாக டிப்ஸ்டர் வெளியிட்ட தகவலின்படி வரவிருக்கும் விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டிருக்கும் எனவும் முன்பக்கத்தில் இரட்டை செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

மேலும் விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 91.2 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி அளவு உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு

8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு

விவோ எஸ் 7டி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 820 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 10 ஐ ஃபன்டச் ஓஎஸ் ஆதரவு, 4000 எம்ஏஎச் பேட்டரி 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை உள்ளது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

விவோ எஸ் 7டி கேமரா அம்சங்களை பொறுத்தவரை இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் அல்ட்ரா வைட் ஆங்கிள் என மூன்று கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதோடு செல்பி வசதிக்காக 44 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா என இரண்டு முன்புற கேமராக்களை கொண்டுள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
Vivo S7T Smartphone May Launching With Mediatek Dimensity 820 Chipset
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X