6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் அசத்தலான விவோ எஸ்7இ 5ஜி.!
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்7இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ எஸ்7இ 5ஜி சாதனத்தின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ எஸ்7இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். மேலும்இந்த சாதனம் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம்வெளிவரும்.

விவோ எஸ்7இ 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மறறும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும். மேலும் கூதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

விவோ எஸ்7இ 5ஜி சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 720 பிராசஸர் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால்இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம்
மூன்று கேமராக்கள் இடம்பெறும். மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறுஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

விவோ எஸ்7இ 5ஜி ஸ்மார்ட்போனில் 4100எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் இந்த ஸ்மார்ட்போனில்இடம்பெறும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ எஸ்7இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications